Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‘விஜய் காசு கொடுக்காமல் கூட்டம் கூட்டியுள்ளார்… போஸ் வெங்கட்டின் கருத்து ஏற்புடையதல்ல’ – இயக்குனர் அமீர் காட்டம்!

Advertiesment
TVK Maanadu

vinoth

, சனி, 9 நவம்பர் 2024 (15:37 IST)
நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த மாதம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற்றது. மாநாட்டில் விஜய் 40 நிமிடத்துக்கும் மேல் உரையாற்றினார். அவர் பேச்சில் திமுகவையும், அதன் தலைமையையும் மறைமுகமாக விமர்சித்தார்.

விஜய்யின் பேச்சைக் கிண்டலடித்த திமுகவைச் சேர்ந்த நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் எக்ஸ் தளப் பக்கத்தில் “யப்பா… உன் கூடவா அரசியல் பண்ணனும். பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு மற்றும் அதீத ஞாபக சக்தி, வியப்பு, எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன். முடிவு??? பாப்போம்” என எதிர்வினையாற்றி இருந்தார்.அவரின் இத்தகையப் பேச்சுக்குக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் போஸ் வெங்கட்டின் தரம் தாழ்ந்த பேச்சுக்குறித்து பேசியுள்ள இயக்குனர் அமீர் “போஸ் வெங்கட்டின் பதிவை நான் பார்த்தேன். அது மிகவும் தரம் தாழ்ந்த பதிவு. விஜய் நீங்கள் நினைப்பது போல தரம் தாழ்ந்தவர் இல்லை. காசு கொடுக்காமல் அவர் இத்தனை லட்சம் பேரைக் கூட்டியுள்ளார்.  அவரை வேறு விதமாக விமர்சித்திருக்கலாம். போஸ் வெங்கட்டின் கருத்து ஏற்புடையதல்ல.” எனப் பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கங்குவா தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாதது நல்லதுதான்… தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சொல்லும் காரணம்!