யூட்யூப் பிரபலம்னா என்ன வேணாலும் செய்யலாமா? சிறுவர்களை துன்புறுத்தி வீடியோ எடுத்த திவ்யா கள்ளச்சி! - அதிரடி கைது!

Prasanth Karthick
புதன், 29 ஜனவரி 2025 (18:20 IST)

சிறுவர்களை பாலியல் ரீதியாக சீண்டி வீடியோ எடுத்ததாக திவ்யா கள்ளச்சி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கொரோனா காலத்தில் மக்கள் வீடுகளில் முடங்கி கிடந்த காலங்களில் புற்றீசல் போல வந்த டிக்டாக் வாசிகள் பலர் வேகமாக பிரபலமடைந்தார்கள். அதை வைத்து பலர் செட்டிலும் ஆனார்கள். அப்படி ட்ரெண்ட் ஆனவர்தான் திவ்யா கள்ளச்சி என்ற பெண். தனது காதலன் கார்த்தி தன்னை விட்டு போய் விட்டதாக சொல்லி அழுது இவர் போடும் வீடியோக்களை சிலர் கார்த்தி என்ற பெயர் கொண்ட தனது நண்பர்களை டேக் செய்து கிண்டல் செய்யத் தொடங்கியதாலேயே இவர் ட்ரெண்டானார். பின்னர் யூட்யூபிலும் வந்த திவ்யா கள்ளச்சி சில நேர்காணல்களையும் ஹோஸ்ட் செய்து வருகிறார்.

 

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களை பாலியல் சீண்டலில் ஈடுபட வைத்து அதனை படம்பிடித்து வைத்துக் கொண்டு அதனை வெளியிடாமல் இருக்க பணம் தர வேண்டும் என திவ்யா கள்ளச்சி மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரில் உடனடி நடவடிக்கை எடுத்த போலீஸார் திவ்யா கள்ளச்சி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கார்த்தி, ஆனந்த், சித்ரா உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்