முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆபரணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் வெள்ளி வைரம் சொத்துக்கள் பெங்களூரில் உள்ள அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த ஆபரணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்ட நிலையில் வழக்கு செலவுக்காக 5 கோடி ரூபாய் செலுத்தி விட்டு ஆபரணங்களை பெற்றுக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் மகள் தீபா ஆகியோர் தங்களுக்கு இந்த சொத்துக்கள் சொந்தம் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இவர்களது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனை அடுத்து ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து ஆபரணங்கள் நில பத்திரங்கள் ஆகியவை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க பெங்களூரில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. மேலும் நகைகளை எடுத்து செல்லும் போது அளவிடும் மதிப்பீட்டாளர்கள் இருக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.