Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எப்.ஐ.ஆரை கசிய விட்டது யார்? சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!

Siva
வெள்ளி, 27 டிசம்பர் 2024 (17:19 IST)
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில், இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து எடுத்த வழக்கில் மாணவியின் எஃப்.ஐ.ஆர். விவரங்களை காவல்துறை வெளியிடவில்லை என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவியின் தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய எஃப்.ஐ.ஆர். அறிக்கை இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் திமுக அரசை குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், முதல் தகவல் அறிக்கையை காவல்துறை வெளியிடவில்லை என்றும், இணையத்தில் வெளியான முதல் தகவல் அறிக்கை உடனடியாக முடக்கப்பட்டதாகவும் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், வழக்கு தொடர்பான விரிவான அறிக்கை சீல் வைத்த உரையில் தாக்கல் செய்யப்படும் என்றும் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இதனை அடுத்து, நீதிபதிகள் தலைமை நீதிபதி உத்தரவை பெற்ற பின்னர் வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்றும், ரிட் வழக்கு தாக்கல் செய்தால் உடனடியாக விசாரணை செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சமூக விரோதிகளை அடித்து துவைக்க வேண்டிய தலைவன்.. தன்னையே அடித்துக் கொள்வதா? - நடிகை கஸ்தூரி வேதனை!

கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்! நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்த விஜயபிரபாகரன்!

ஈஷா கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழா; சிறப்பு விருந்தினராக கிரிக்கெட் வீரர் சேவாக் பங்கேற்பு!

3 நாட்களில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை! 6 நாட்களுக்கு மிதமான மழை! - சென்னை வானிலை ஆய்வு மையம்!

பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்ய பிரியா கொலை வழக்கு: நீதிபதியின் அதிரடி தீர்ப்பு

அடுத்த கட்டுரையில்