Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னைக்கு கடைசி சுற்று மழை எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் அளித்த தகவல்..!

Siva
வெள்ளி, 27 டிசம்பர் 2024 (16:55 IST)
சென்னைக்கு கடைசி சுற்று மழை எப்போது என்பது குறித்த தகவலை தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

வானிலை நிலவரங்களை அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வரும் நிலையில், தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்.

அந்த வகையில், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் டிசம்பர் 30, 31 ஆகிய தேதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். காற்றழுத்த தாழ்வின் காரணமாக பெய்யும் மழையில், சென்னைக்கு கடைசி மழை இதுதான் என்றும், இந்த மழைக்கு பின்னர் சென்னைக்கு மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பூண்டி ஏரி உள்பட சென்னையை சுற்றியுள்ள ஏரிகள் நிரம்பி உள்ளதாகவும், எனவே இந்த ஆண்டு தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் கூறியுள்ளார். காற்றழுத்த தாழ்வு கடந்து சென்று மீண்டும் திரும்பி வந்துள்ளதால், கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் நல்ல மழை பெய்தது என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக டிசம்பர் 30, 31 ஆகிய தேதிகளில் மழை பெய்யும் என்றும், இதுதான் இந்த ஆண்டின் இறுதி மழை என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேபோல், தூத்துக்குடி, ராமநாதபுரம், வேலூர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, தென்காசி, திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், ஈரோடு, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, நீலகிரி ஆகிய பகுதிகளில் இன்று மழை பெய்யும் என்றும், மேற்கண்ட மாவட்டங்களுக்கும் இதுதான் கடைசி மழையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments