Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 23 April 2025
webdunia

மனைவியுடன் உறவு வைக்க கைதிக்கு அனுமதி கொடுத்த நீதிமன்றம்

Advertiesment
husband
, வியாழன், 25 ஜனவரி 2018 (22:59 IST)
ஆயுள் தண்டனை கைதி ஒருவரின் மனைவி தான் குழந்தை பெற விரும்புவதாக தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட், கைதிக்கு இரண்டு வார விடுப்பு கொடுத்து அனுமதி அளித்துள்ளது.

நெல்லையை சேர்ந்த சித்திக் அலி என்பவர் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார். இவரது 32 வயது மனைவி நீண்ட காலமாக குழந்தை இல்லாததால் அதற்குரிய சிகிச்சை எடுத்து தற்போது குழந்தை பெற்றுக்கொள்ள உடல்ரீதியாகவும் மருத்துவரீதியாகவும் தயாராக இருப்பதாகவும், எனவே தனது கணவரை 60 நாட்கள் விடுமுறையில் வெளியே விடவேண்டும் என்றும் அவர் மனுதாக்கல் செய்தார்

இந்த மனுவிற்கு சிறை அதிகாரிகள் எதிர்ப்ப்பு தெரிவித்திருந்த நிலையிலும் குழந்தை பெற்றுக்கொள்வது ஒரு பெண்ணின் உரிமை என்றும், கைதியாக இருந்தாலும் அவர் மனைவியுடன் உறவு கொள்வது உள்பட ஒருசில உரிமைகளை கொடுத்தால் அவர் திருந்துவதற்கு வாய்ப்பாக அமையும் என்று கூறி சித்திக் அலிக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை அளித்து தீர்ப்பளித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கே எனக்கு என்று முந்தாதிருந்தால் நாளை நமதே: கமல் வெளியிட்ட ஆடியோ