Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐஐடி மாணவியை பலாத்காரம் செய்த விமானப்படை அதிகாரி....

Advertiesment
ஐஐடி மாணவியை பலாத்காரம் செய்த விமானப்படை அதிகாரி....
, வியாழன், 25 ஜனவரி 2018 (21:01 IST)
பீகார் மாநிலத்தை சேர்ந்த விமானப்படை அதிகாரி தன்னை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி பல முறை பலத்காரம் செய்ததாக ஐஐடி மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளார். 
 
பேஸ்புக் மூலம் அறிமுகமான விமானப்படை அதிகாரி கல்வி நிறுவனத்தில் உள்ள மாணவிகள் விடுதியில் வைத்து தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என அந்த மாணவி புகார் அளித்துள்ளார். 
 
இந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் அந்த அதிகாரியின் மீது எப்ஐஆர் பதிவு செய்து உள்ளனர். விமானப்படை அதிகாரி பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விமானப்படை அதிகாரியின் நண்பர், சகோதரி மற்றும் மைத்துனர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
 
பாதிக்கப்பட்ட மாணவி தன்னுடைய வாக்குமூலத்தை பதிவுசெய்ய மாவட்ட மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாங்க பழகலாம்... தென்கொரியாவிற்கு வடகொரியா அழைப்பு!!