Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சேலம் பசுமை வழிச்சாலைக்கு மக்கள் அமோக ஆதரவு - எடப்பாடி பழனிசாமி

சேலம் பசுமை வழிச்சாலைக்கு மக்கள் அமோக ஆதரவு - எடப்பாடி பழனிசாமி
, ஞாயிறு, 24 ஜூன் 2018 (11:39 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் பசுமை வழிச்சாலைகளுக்காக விவசாயிகள் முன்வந்து நிலத்தை தருகின்றனர் எனக் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் அமைய உள்ள 8 வழி பசுமை சாலைக்கு எதிராக சேலம மாவட்ட மக்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இயற்கை வளங்களை அழித்து அமைக்க போகும் இந்த சாலைக்கு ஏன் அரசு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
ஆனால் தமிழக அரசோ சாலை அமைத்தே தீருவோம் என்று விடாப்பிடியாக செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்ட கலெக்டர் இதனால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.
 
இந்நிலையில் சேலம் விமான நிலையத்தில் இதுகுறித்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசிடம் இந்த பசுமை வழிச்சாலை திட்டத்தை போராடி பெற்றதாக தெரிவித்தார். பண்ணாட்டு முதலீடு மூலமாக தமிழகம் வளர்ச்சி பெறும் என்றும் அதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்தார்.
webdunia
சேலம் பசுமை வழிச்சாலைக்காக சிலர் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் பல விவசாயிகள் முன்வந்து தங்களது நிலத்தை தருகின்றனர் என முதல்வர் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சவுதி அரேபியாவில் பெண்கள் இன்றுமுதல் கார் ஓட்டலாம்