திமுக எம்பி செந்தில்குமார் அவர்கள் சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான அதிமுக விளம்பரம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் என்பது தெரிந்ததே. ஒன்று வியாபாரத்துக்கு விசுவாசமாக இருங்கள் அல்லது கட்சிக்கு விசுவாசமாக இருங்கள் என்றும் அதிமுகவின் விளம்பரத்தை சன் டிவியில் எப்படி ஒளிபரப்பலாம் என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்
இந்த நிலையில் சன்டிவி சம்பந்தமான அனைத்து ஊடகங்களிலும் செந்தில்குமார் எம்பி சார்ந்த எந்த செய்தியையும் வெளியிட வேண்டாம் என வாய்வழியாக உத்தரவிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியுள்ளது
இதுகுறித்து செந்தில்குமார் எம்பி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
தினகரன், தமிழ்முரசு, மாலை முரசு, சன் செய்திகள் ஆகிய ஊடகங்களில் இனி என்னை சார்ந்த செய்தி வெளியிட வேண்டாம் என அவர்கள் நிருபர்களுக்கு அந்த நிறுவனம் கட்டளை பிறப்பித்துள்ளது. சமூக வலைதளம் முக்கியத்துவம் வாய்ந்த இக்காலத்தில் சீப்பு மறைத்து வைப்பது சாத்தியம் இல்லாத ஒன்று என்று கூறியுள்ளார். சன் குழுமத்திற்கு எதிராக திமுக எம்பி செந்தில்குமார் பதிவு செய்துள்ள இந்த டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது