சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை கௌரவிக்கும் விதமாக Techno Spark 10 Pro Moon explorer edition அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவு குறித்த ஆய்வுக்காக அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவை அடைந்து ஆய்வுகளை செய்துள்ளது. இதன்மூலம் நிலவில் தரையிறங்கிய நாடுகளில் 4வது நாடாக இந்தியா பெருமை பெற்றுள்ளது. இதை இந்தியர்கள் அனைவரும் கொண்டாடி வரும் நிலையில் சந்திரயான் 3 திட்டத்தை கௌரவிக்கும் விதமாக டெக்னோ ஸ்மார்ட்ஃபோன் நிறுவனம் புதிய Techno Spark 10 Pro Moon explorer edition-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
Techno Spark 10 Pro Moon explorer edition சிறப்பம்சங்கள்:
-
6.78 ஃபுல் ஹெச்டி+ டிஸ்ப்ளே
-
மீடியாடெக் ஹெலியோ G88 சிப்செட்
-
8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்
-
128 ஜிபி இண்டெர்னல் மெமரி
-
ஆண்ட்ராய்டு 13, ஹை ஓஎஸ் 12.6
-
50 எம்பி + 0.08 எம்பி டூவல் ப்ரைமரி கேமரா
-
32 எம்பி முன்பக்க செல்பி கேமரா
-
5000 mAh பேட்டரி, 18 W பாஸ்ட் சார்ஜிங்
இந்த Techno Spark 10 Pro Moon explorer edition-ல் மெமரி கார்டு வசதி, எஃப் எம் ரேடியோ, சைடு ஃபிங்கர் சென்சார் ஆகிய கூடுதல் அம்சங்களும் உள்ளது. இதன் நிறம் நிலவு பயணத்தை குறிக்கும் வகையில் ப்ளாக் மற்றும் க்ரே கலர் வேரியண்டில் அமைந்துள்ளது. இதன் விலை ரூ.11,999 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.