அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்டிருந்த நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவு பெறுவதை அடுத்து அவர் எம்பி எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.  
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	போக்குவரத்து துறையில் லஞ்சம் வாங்கியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இது குறித்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். 
 
									
										
			        							
								
																	
	 
	இதனை அடுத்து அவருக்கு உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் குணமாகிய உடன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 
 
									
											
							                     
							
							
			        							
								
																	
	 
	இந்த நிலையில் எம்பி எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவருடைய வழக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவு பெறுவதை அடுத்து அவர் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராக போகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.