அறிஞர் அண்ணா பிறந்த நாளில் 37 முஸ்லிம் கைதிகளை விடுவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்
சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் ’அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 14 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்த 700 சிறைவாசிகளை விடுதலை செய்ய சமீபத்தில் அரசு ஆணை பிறப்பித்தது. ஆளுநர் இந்த அரசாணையை ஏற்றுள்ளார்.
ஆனால் 20 முதல் 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து சிறையில் இருக்கும் 37 முஸ்லிம் சிறைவாசிகள் இன்னும் சிறையில் தான் உள்ளனர் வரும் செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு வழக்கம்போல் 14 ஆண்டுகள் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய ஏற்பாடு செய்து வரும் நிலையில் அதில் இந்த 37 முஸ்லிம் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைப்பதாக தெரிவித்துள்ளார்.