உற்சாகத்தின் உச்சத்தில் ஸ்டாலின்: செந்தில் பாலாஜி அப்படி என்ன செய்தார்?

Webdunia
வியாழன், 27 டிசம்பர் 2018 (19:02 IST)
கரூரில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட விழா நடைபெற்றது. இந்த விழாவில் சமீபத்தில் அமமுகவில் இருந்து திமுகவுக்கு கட்சி மாறிய செந்தில் பாலாஜி செய்த காரியம் ஸ்டாலினை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 
 
ஆம், செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் 30,425 பேர் திமுகவில் இணைந்ததுள்ளனர். இது திமுகவிற்கு பெரிய வலு சேர்க்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
மேலும், ஸ்டாலின் அந்நிகழ்வில் பேசியது பின்வருமாறு, நம்மை வெல்ல யாரும் இல்லை, பிறக்க போவதும் இல்லை. இந்த மக்கள் கூட்டத்தை பார்த்தாலே நமக்கு தோல்வியே கிடையாது என்பது தெரிகிறது. 
செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் 30,425 பேர் திமுகவில் இணைந்துள்ளனர். செந்தில் பாலாஜிக்கு இவர்கள் வலு சேர்ப்பார்கள். செந்தில் பாலாஜிக்கு மட்டுமில்லாமல் இவர்கள் திமுகவிற்கு பெரிய பலமாக இருப்பார்கள்.
 
புதிய இயக்கத்தில் சேர இங்கிருப்பவர்கள் வரவில்லை. அவர்கள் யாரும் புதிய கட்சிக்கு வரவில்லை. இது அவர்களின் தாய் இயக்கம். பெற்றோர் நம்பிக்கையை காத்த பிள்ளையாக திமுகவில் இணைந்துள்ளனர் என பேசினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலை உணவுக்காக டிகே சிவகுமார் வீட்டுக்கு சென்ற சித்தாராமையா.. இருவரும் சமரசமா?

பழனிச்சாமி எனக்கு தலைவர் இல்ல!.. பதில் சொல்ல அவசியம் இல்ல!.. செங்கோட்டையன் அதிரடி!...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கல்பாக்கம் அருகே கரை கடக்குமா? சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை!

இன்று தங்கம் விலை சரிந்தாலும் ரூ.96000க்கும் மேல் ஒரு சவரன்.. இன்னும் இறங்குமா?

நேற்று காலையில் உயர்ந்து பிற்பகலில் சரிந்த பங்குச்சந்தை.. இன்று காலையிலேயே சரிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments