சமீபத்தில் மத்திய அரசு மூன்று குற்றவியல் சட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது என்பதும் இந்த சட்டம் பாராளுமன்றத்தில் இரண்டு அவைகளிலும் வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டது என்பதும் அதன் பின் ஜனாதிபதி இந்த சட்டத்திற்கு அனுமதி அளித்தார் என்பதும் தெரிந்தது.
ஜூலை 1 முதல் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து இந்த சட்டங்களுக்கு இந்தியில் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றும் இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு இதுகுறித்து நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. மூன்று குற்றவியல் சட்டங்களும் ஆங்கில எழுத்துக்களில் தான் பெயரிடப்பட்டுள்ளன என்றும் சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விவகாரம் என்பது நாடாளுமன்றத்தின் விருப்பம் என்றும் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் ஒரு மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
இதனை அடுத்து நீதிமன்றம் இந்த மனு குறித்து என்ன தீர்ப்பு அளிக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.