Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜியின் அமைச்சராக நீடிக்க எதிர்ப்பு.. சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை..!

Siva
வெள்ளி, 5 ஜனவரி 2024 (07:15 IST)
செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களாக சிறையில் உள்ளார். ஆனால் அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார்

இந்த நிலையில் எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்கிறார் என விளக்கம் அளிக்க வேண்டும் என அதிமுக தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.  

ALSO READ: தமிழகத்திற்கு, 37,907 கோடி ரூபாய் வெள்ள நிவாரணம் தேவை: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்..!

இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று நீதிபதி கூறியதோடு செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீடிக்க வேண்டுமா என்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும்  சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு மனு என்று விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மனுவின் தீர்ப்பில் தான் அமைச்சர் அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க முடியுமா என்பது குறித்து தெரிய வரும்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments