செந்தில் பாலாஜி கைது சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும் என்று அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்றது.
இந்த நிலையில் இந்த மனு மீது தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் அமலாக்க துறையின் கைது சட்டவிரோதம் என நீதிபதி நிஷா பானு தீர்ப்பளித்துள்ளார்
ஆனால் நீதிபதி பரத சக்கரவர்த்தி மேகலாவின் மனோவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளார், இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதை அடுத்து மூன்றாவது நீதிபதி விசாரணைக்காக தலைமை நீதிபதி இடம் இந்த வழக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன