Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரருக்கு 3வது முறையாக சம்மன்: வருமானவரித்துறை அதிரடி..!

Advertiesment
income tax
, ஞாயிறு, 2 ஜூலை 2023 (13:56 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரருக்கு ஏற்கனவே இரண்டு முறை வருமானவரித்துறை ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பிய நிலையில் தற்போது மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தற்போது உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
 
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் என்பவருக்கு அமலாக்கத்துறை இரண்டு முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அந்த இரண்டு முறை சம்மன் அனுப்பியும் அசோக்குமார் ஆஜராகாத நிலையில் வரும் 27ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என மூன்றாவது முறையாக வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 
 
இந்த சம்மனுக்கு அசோக்குமார் ஆஜர் ஆவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!