நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என விசாரணையின் போது செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளது என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று நடந்தது. இன்றைய விசாரணையின்போது, நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என விசாரணையின் போது செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளது என்றும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்
நீதிமன்றத்தில் வாதாடினார்.
மேலும் செந்தில் பாலாஜி மீது கூறப்பட்டுள்ள சட்ட விரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு 9 ஆண்டுகள் முன்பானது என்று தெரிவித்தார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை, ஜாமின் கோருவதற்கு உடல் நிலை ஒரு காரணம் அல்ல என்றும், செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வாதடினார்.