Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

R.B.V.S. மணியனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!- நீதிமன்றம் உத்தரவு

Advertiesment
Ex vhp leader maniyan
, வியாழன், 14 செப்டம்பர் 2023 (12:30 IST)
அம்பேத்கர், திருவள்ளுவரை இழிவுபடுத்திப் பேசியதாக ஆர்.பி.வி.எஸ்.மணியன் கைது செய்யப்பட்ட  நிலையில் அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வி.எச்.பி முன்னாள் மாநில துணைத்தலைவர் ஆர்.பி.வி.எஸ் மணியன், அம்பேத்கர், திருவள்ளுவர் உள்ளிட்ட தலைவர்களை இழிவாக பேசியிருந்தார்.

இதுகுறித்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இன்று காலை சென்னை, தி நகரில் வைத்து  தனிப்படை போலீஸார் ஆர்.பி.வி.எஸ். மணியனை கைது செய்தனர். இதையடுத்து,  நீதிமன்றத்தில் அவரை போலீஸார் ஆஜர்படுத்திய நிலையில், அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மணியனின் உடல் நிலையக் கருத்தில் கொண்டு, தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று மணியன் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளையும் ஆஜராக முடியாது: போலீசாருக்கு தகவல் தெரிவித்த சீமான்..!