அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஒரு மாதமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், சிறை மருத்துவமனையில் சிகிச்சை செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி வந்ததால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு அங்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஜூலை 26 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜிக்கு காவல் நீடிக்கப்பட்டு இருக்கும் நிலையில் நேற்று அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் அவர் மீண்டும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.