Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளியை பாதுகாக்க கீழ்த்தரமான செயல்: அண்ணாமலை

Annamalai

Mahendran

, வியாழன், 26 டிசம்பர் 2024 (12:46 IST)
திமுகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளியை பாதுகாக்க கீழ்த்தரமான செயல் செய்யப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அண்ணா பல்கலை மாணவி பாலியல் கொடுமை விவகாரம் குறித்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால், பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தச் சென்ற, முன்னாள் ஆளுநர் திருமதி தமிழிசை செளந்திரராஜன், தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் திரு
கரு நாகராஜன்,  மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சகோதர சகோதரிகளை, வலுக்கட்டாயமாகக் கைது செய்திருக்கிறது காவல்துறை.

குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால், பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை வெளியே கசிய விட்டிருக்கிறார்கள். ஒரு பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கடமையிலிருந்து தவறியிருக்கிறது திமுக. இது தனிமனித உரிமைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, சட்டவிரோதச் செயல்பாடும் ஆகும். இதற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் முழு பொறுப்பு.

திமுகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளியைப் பாதுகாக்க, இத்தனை கீழ்த்தரமான, மனசாட்சியற்ற செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் திமுக அரசையும், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் ஸ்டாலினையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாகத் தமிழகத்தை மாற்றியிருப்பதற்கு வெட்கப்படுங்கள் ஸ்டாலின்.


Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு ஆண்டில் 8.30 கோடி ப்ளேட் பிரியாணி விற்பனை! 10 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம்! பிரியாணி இவ்வளவு விரும்பப்படுவது ஏன்?