Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவில் இணைந்த அதிமுக முக்கிய தலையின் அண்ணன் மகன்!!

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (11:33 IST)
அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் மகன் திமுகவில் இணைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
அதிமுகவின் மூத்த உறுப்பினரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனின் அண்ணன் கே.ஏ.காளியப்பன் மகன் கே.ஏ.கே.செல்வம் திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 
 
இதுகுறித்து திமுகவின் டிவிட்டர் பக்கத்தில், கழக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஈரோடு வடக்கு மாவட்டத்தை சேர்ந்த அதிமுக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் அண்ணன் மகன் குள்ளம்பாளையம் திரு. கே.கே.செல்வன் மற்றும் கோபி கே.ஈ.கதிர்பிரகாஷ், திரு. கோபி ஆர்.துரைசாமி ஆகியோர் திமுகவில் இணைந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
கே.ஏ.செங்கோட்டையனின் அண்ணன் மகன் கே.கே.செல்வன் தமிழ்நாடு மருந்து விற்பனையாளர் சங்கத்தின் மாநில தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments