Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனிமே விசிலுக்கு No!.. வெயிட் பண்ணி பாருங்க!.. கலாய்த்த செங்கோட்டையன்!..

Advertiesment
sengottaiyan

Mahendran

, சனி, 24 ஜனவரி 2026 (19:41 IST)
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னத்தை வழங்கியிருக்கிறது தேர்தல் ஆணையம்.தேர்தல் ஆணையம் இதை சாதாரணமாக செய்தார்களோ என்னவோ!.. ஆனால் தவெகவிற்கும், விஜய்க்கும் இது நன்மையாக முடிந்து விட்டது. ஏனெனில், விசில் ஒரு கவர்ச்சிகரமான சின்னம்.. கோட் படத்தில் கூட விஜய் விசில் போடு என பாடியிருந்தார்.. எனவே ‘விசில் போடு’ என்கிற வாசகத்தையே பிரச்சார வாசகமாக தவெகவின் பயன்படுத்துவார்கள்.

தவெக சார்பில் விசில், கிரிக்கெட் பேட், ஹெல்மெட் உள்ளிட்ட பத்து சின்னங்களை வரிசைப்படுத்தி அதில் ஒன்றை தங்களுக்கு ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தார்கள். அதில் தவெக முதலில் கேட்ட விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கிறது.

இந்நிலையில், தவெக விழா ஒன்றில் பேசிய செங்கோட்டையன் ‘பலரும் விசில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.. விசில் சின்னத்தை பார்த்த பிறகு நாங்களே மாறிவிட்டோம்.. இனிமேல் போலீஸ்காரர்களையும், பேருந்து நடத்துனர்களையும் விசில் அடிக்க வேண்டாம் என சொல்லி விடுவார்கள்.. விசில் எவ்வளவு முக்கியமானது.. அதனை இறைவன் விஜய்க்கு கொடுத்துள்ளார்.. அரசியல் எதிர்காலத்தில் விஜய்தான் ஹீரோ
’ என்று அவர் பேசியிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரேமலதா வைத்த கோரிக்கை!.. ஆடிப்போன பாஜக!.. நடந்தது என்ன?...