புதுச்சேரி பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளின் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டுமென பல்கலைக்கழகம் சற்றுமுன் அறிவித்துள்ளது
செமஸ்டர் தேர்வுகள் ஜூலை 19-ஆம் தேதி முதல் ஆன்லைனில் நடத்த புதுச்சேரி பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. வினாத்தாள்களை ஈமெயிலில் அனுப்பவும் விடைத்தாள்களை மாணவர்கள் ஸ்கேன் செய்து அனுப்பவும் புதுச்சேரி பல்கலைக் கழக நிர்வாகிகள் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது
ஆன்லைன் தேர்வு முறை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு பொருந்தாது எனவும் புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. புதுச்சேரியில் தற்போது வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து புதுச்சேரி பல்கலைக்கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து ஆன்லைனில் மாணவர்கள் தேர்வு எழுத தற்போது தயாராகி வருகின்றனர் என்பதும் ஆன்லைனில் தேர்வு நடத்துவதற்கு முன்பாக மாதிரி தேர்வு நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன