தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில் சமீபகாலமாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம் 
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	அந்த வகையில் இன்று முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக இதுவரை அண்டை மாநிலங்களுக்கு பேருந்து போக்குவரத்து வசதி இல்லாமல் இருந்தது என்பதும் மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு வெளியேயும் மட்டும்தான் பேருந்து போக்குவரத்து வசதி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
									
										
			        							
								
																	
	 
	இந்த நிலையில் இன்று முதல் புதுவைக்கு பேருந்து போக்குவரத்து சேவை தொடங்கி உள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து புதுவைக்கும், புதுவையில் இருந்து தமிழகம் செல்லும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
									
											
							                     
							
							
			        							
								
																	
	 
	இதேபோல் படிப்படியாக மற்ற அண்டை மாநில நகரங்களுக்கும் பேருந்து சேவை தொடங்கப்படும் என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது