Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் விரைவில் காங்கிரஸ் ஆட்சி.. செல்வப்பெருந்தகை பேச்சால் பரபரப்பு..!

Mahendran
செவ்வாய், 14 மே 2024 (10:09 IST)
எவ்வளவு காலம் தான் நாம் மற்ற கட்சிகளிடம் தொகுதிகள் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருப்பது, நாம் தொகுதிகளை மற்ற கட்சிகளுக்கு பிரித்துக் கொடுக்கும் இடத்தில் இருக்க வேண்டும் என்றும் விரைவில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி, டெல்லியிலும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைய தொண்டர்கள் பாடுபடவேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திருவண்ணாமலை மாவட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய செல்வப்பெருந்தகை  1967ஆம் ஆண்டிலிருந்து நாம் ஆட்சியைப் பிடிக்க முடியாத நிலையில் இருக்கிறோம், இந்த நிலையில் இருந்து தொகுதியை பிரித்துக் கொடுக்கும் நிலைக்கு காங்கிரஸ் கட்சி வளர வேண்டும்,

இன்னும் எவ்வளவு காலம் தான் நாம் மற்ற கட்சிகளிடம் தொகுதிகள் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருப்பது, இனி ஒரு நொடி கூட தாமதிக்காமல் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும் ஆட்சியைப் பிடிக்கவும் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஒரு காலத்தில் நாம் அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகளை பங்கிட்டு கொடுத்தோம், அந்த நிலை மீண்டும் மாற வேண்டும், தமிழகத்தில் காமராஜர் ஆட்சி, மத்தியிலும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியை சாத்தியப்படுத்த வேண்டும் என்று பேசி உள்ளார். அவரது இந்த பேச்சு திமுக கூட்டணியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments