Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்போதே பங்குகளை வாங்கி கொள்ளுங்கள் ஜூன் 4-க்குப் பிறகு வாங்க முடியாது: அமித்ஷா

Siva
செவ்வாய், 14 மே 2024 (09:00 IST)
இப்போதே பங்குகளை வாங்கி கொள்ளுங்கள் என்றும் ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு பங்குச்சந்தை மிகப்பெரிய அளவில் உயரும் என்றும் தேர்தல் பிரச்சாரத்தில் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் தேர்தல் முடிவில் பாஜக மீண்டும் ஆட்சியமைத்தால் பங்குச்சந்தை மிகப்பெரிய அளவில் உயரும் என்று கூறப்படுகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை சரிந்து வருவதால் பாஜக தோல்வியடைய வாய்ப்பிருப்பதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தேர்தல் பிரச்சார மேடை ஒன்றில் பேசியபோது, பாஜகவின் மோசமான செயல்திறன் காரணமாக பங்குச்சந்தை வீழ்ச்சியை சந்தித்து வருவதாக கூறப்படுவது தவறான தகவல் என்றும் ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு பங்குச்சந்தை கணிசமான ஏற்றத்தை சந்திக்கும் என்றும் தெரிவித்தார்

எனவே இப்போதே பங்குச்சந்தை இறங்கும்போது பங்குகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்றும் ஜூன் 4-ம் தேதி பங்குகளை அதிக விலைக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் பங்குகளை சரியான விலைக்கு வாங்க இதுதான் சரியான தருணம் என்றும் அவர் கூறியுள்ளார்

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை சந்திக்கும் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ்.. யார் முதல்வர்?

நெல்லையை அடுத்து மதுரையில்.. அதிமுக ஆய்வுக்குழு கூட்டத்தில் அடிதடி..!

சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை..!

தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்.. அர்ஜூன் சம்பத் பேச்சு

வானத்திற்கும் பூமிக்கும் முழங்கிய ஸ்டாலின் ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள்: என்ன பதில்? ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments