Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கலைஞர் உணவகத்திற்கு செல்லூர் ராஜூ வரவேற்பு

Advertiesment
கலைஞர் உணவகத்திற்கு செல்லூர் ராஜூ வரவேற்பு
, வெள்ளி, 26 நவம்பர் 2021 (17:04 IST)
தமிழகத்தில் கலைஞர் உணவகம் அமைக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணியின் அறிவிப்புக்கு செல்லூர் ராஜூ வரவேற்பு அளித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழகம் முழுவதிலும் அம்மா உணவகம் அமைக்கப்பட்டது. இதில், நாள்தோறும் ஏழை, எளியமக்கள் குறைந்த விலையில் சாப்பிட்டு பயனடைந்து வருகின்றனர்.

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அதிகப்பெரும்பான்மையில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் நிலையில், அமைச்சர் சக்கரபாணி 500 சமுதாய உணவகங்கள் கலைஞர் உணவகம் என்ற பெயரில் அமைக்கப்படும் என அறிவித்தார்.

இதற்கு அதிமுக  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டம் தெரிவித்துள்ளார். இதுகுறித்டு அவர் கூறியுள்ளதாவது:  அம்மா உணவகம் என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் நோக்கம் கொண்டதாகவும் , அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாகவும் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய உணவகங்கள் அம்மா உணவகங்கள் என்ற பெயரில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கலைஞர் உணவகத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வரவேற்பு அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: கலைஞர் உணவகம் கொண்டுவருவதை வரவேற்கிறோம். அம்மா உணவகங்களை  மறைக்காமல் கலைஞர் உணவகங்களை செயல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அறிமுகமானது ஒப்போ ரெனோ 7 SE 5G ஸ்மார்ட்போன்!!