Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா என்ற ஒருவர் பிறந்த வரலாறே தெரியாமல் போயிருக்கும்: செல்லூர் ராஜூ அடுத்த அதிரடி!

Webdunia
ஞாயிறு, 21 ஜனவரி 2018 (15:01 IST)
அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ இந்த ஆட்சியில் அதிகம் பிரசித்தி பெற்றவர். அவரது தெர்மாக்கோல் திட்டத்தின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர். அதன் பிறகு அவரது ஒவ்வொரு கருத்தும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக என்ற ஒரு கட்சி இல்லை என்றால் அண்ணா என்ற ஒருவர் பிறந்த வரலாறே தெரியாமல் போயிருக்கும் என்ற தகவலை கூறினார்.
 
மதுரையில் நடந்த எம்ஜிஆர் 101-வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட செல்லூர் ராஜூ, எம்ஜிஆர் தான் தொடங்கிய கட்சியின் கொடியில் தனது தலைவரான பேரறிஞர் அண்ணாவின் உருவப்படத்தைப் பொறித்தார். தான் ஏற்றுக்கொண்ட தலைவனின் உருவத்துடன் கூடிய கொடியைக் கொண்ட ஒரே இயக்கம் அதிமுகதான் என்றார். மேலும் எம்ஜிஆர் மட்டும் அதிமுகவைத் தொடங்காமல் இருந்திருந்தால், அண்ணா என்ற ஒருவர் பிறந்தார் என்ற வரலாறே தெரியாமல் போயிருக்கும் என்று பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல, வேடிக்கை காட்ட வரும் சிங்கம்: சீமான் கேலி

டெட் தேர்வு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

வாக்காளர் அட்டை விவகாரம்: சோனியா காந்திக்கு எதிரான மனு தள்ளுபடி..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை.. வானிலை எச்சரிக்கை

பொறுப்பு டி.ஜி.பி. நியமனம்: உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments