Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பருவமடையாத 9 வயது சிறுமிக்கு 39 வயது நபருடன் திருமணம்!

Webdunia
ஞாயிறு, 21 ஜனவரி 2018 (13:57 IST)
பருவம் அடையாத 9 வயதான 4-ஆம் வகுப்பு மாணவிக்கு 39 வயது நபருடன் திருமணம் செய்து வைக்க குடும்பத்தார் முயற்சித்தது திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த 18-ஆம் தேதி திருச்சி முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மர்ம நபர் ஒருவர் கால் செய்து குழந்தை திருமணம் குறித்த தகவல் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் 9 வயதான பள்ளி மாணவியை 39 வயது நபருக்கு திருமணம் செய்திட மின்னதம்பட்டி கிராமத்தில் முயற்சி நடப்பதாக கூறினார்.
 
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் 4-ஆம் வகுப்பு படித்து வரும் பருவம் கூட அடையாத 9 வயது சிறுமிக்கு அவரது குடும்பத்தினரே 39 வயது நபருடன் திருமணம் செய்து வைக்க முயன்ற உண்மையை கண்டுபிடித்தனர்.
 
இதனையடுத்து அந்த சிறுமியை மீட்டு குழந்தைகள் நல குழுவிடம் போலீசார் ஒப்படைத்தனர். இந்த வக்கிர செயலில் ஈடுபட்ட அந்த குடும்பத்தினர் பேசியபோது, தற்போது திருமண நிச்சயம் செய்ய மட்டுமே ஏற்பாடு செய்தோம். பருவம் அடைந்த பின்னர் தான் திருமணம் நடைபெறும் என கூறினர். இதனையடுத்து அவர்கள் மீது குழந்தை திருமண தடைச்சட்டம் மற்றும் பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்