Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கள்ளக்காதலனுடன் மனைவி எடுத்த செல்பி! மாமியார் வீட்டுக்கே அனுப்பி செய்த ரகளை!

Advertiesment
கள்ளக்காதலனுடன் மனைவி எடுத்த செல்பி! மாமியார் வீட்டுக்கே அனுப்பி செய்த ரகளை!

Prasanth Karthick

, செவ்வாய், 12 நவம்பர் 2024 (10:32 IST)

இளம்பெண் ஒருவர் கணவனை விட்டு கள்ளக்காதலனுடன் சென்று அதை மாமியார் வீட்டிற்கே போட்டோ எடுத்து அனுப்பிய சம்பவம் குமரியில் நடந்துள்ளது.

 

 

குமரி மாவட்டம் ஒருநூறாம் வயல் பகுதியை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். இவருக்கு ஒருவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில காலமாக கருத்து வேறுபாடு காரணமாக கணவருடன் எழுந்த வாக்குவாதத்தால் இளம்பெண் கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

 

அங்கு இருந்த அவர் பிறகு கேரள மாநிலம் வெள்ளறடை பகுதியில் உள்ள ஒரு கடைக்கு வேலைக்கு சென்று வரத் தொடங்கியுள்ளார். அப்போது இளம்பெண்ணின் கணவரது வழி உறவினரான ஆம்பூரி பகுதியை சேர்ந்தவருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கேரள வனத்துறையில் பணியாற்றும் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.

 

இந்நிலையில் இருவரும் ரகசியமாக காதலித்து வந்த நிலையில் சேர்த்து வாழ்வதென்று முடிவெடுத்துள்ளனர். இதையடுத்து தனது குழந்தைகளை தாயார் வீட்டிலேயே விட்டுவிட்டு கேரளாவுக்கு சென்று அவருடன் தனியாக வசிக்கத் தொடங்கியுள்ளார் இளம்பெண். மேலும் தான் தனது கள்ளக்காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை தனது கணவருக்கும், மாமியாருக்கும் அனுப்பியுள்ளார்.

 

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் அதிகாரிகள் அழைத்ததன் பேரில் இளம்பெண்ணும், அவரது கள்ளக்காதலனும் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இந்த் சம்பவம் குமரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராகுல் காந்தி பொய் சொல்கிறார்; தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த பாஜக..!