கோவில் நகை விவரங்கள் கிடையாது; கோவில்கள் திறப்பு எப்போது? – அமைச்சர் சேகர் பாபு விளக்கம்!

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (10:23 IST)
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் விவரங்கள் வெளியீட்டில் நகை விவரங்கள் வெளியிடப்படாது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் அலுவலக விவரங்கள், சொத்து மற்றும் நில விவரங்களை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் ஆன்லைனில் பதிவேற்ற சமீபத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டிருந்தார். அதன்படி கோவில் விவரங்கள் அனைத்தும் மெல்ல ஆன்லைனில் பதிவேற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆய்வுகள் மேற்கொண்ட பின் பேட்டியளித்த அமைச்சர் சேகர் பாபு ”கோவில்களின் நகை விவரங்கள் ஆன்லைனில் வெளியிடப்படாது. அசையும் சொத்துகளின் விவரங்களை ஆன்லைனில் பதிவது பாதுகாப்பற்றது. தமிழகத்தில் ஒரு கொரோனா பலி கூட ஏற்படாத நாள் வரும்போது கோவில்கள் திறக்கப்படும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நாணயங்கள் போலியா? அதிர்ச்சி தகவல்..!

பொங்கலுக்கு பிறகு அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

ஆட்டத்தை ஆரம்பித்த அமெரிக்கா!.. வெனிசுலா எண்ணெய் கப்பல் பறிமுதல்!...

1000 காளைகள்!.. 600 வீரர்கள்!. அனல் பறக்கும் பாலமேடு ஜல்லிக்கட்டு!...

டிக்கெட் புக் ஆகவே இல்லை.. பொங்கல் சிறப்பு ரயில்களை ரத்து செய்த ரயில்வே..!

அடுத்த கட்டுரையில்
Show comments