Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நல்ல காரியங்களை ராகு காலத்தில் செய்யவதில்லை ஏன்?

Advertiesment
நல்ல காரியங்களை ராகு காலத்தில் செய்யவதில்லை ஏன்?
, வெள்ளி, 18 ஜூன் 2021 (00:11 IST)
புராணங்களின் படி ஒரு நாளில் உள்ள இருபத்தி நான்கு மணி நேரத்தில் 1 1/2 மணி நேரம் ராகுவும், 1 1/2 மணி நேரம் கேதுவும் அம்பிகையை  பூஜிக்கின்றன. அதில் ராகு வழிபாடு செய்யும் நேரம் ராகு காலம் என்றும், கேது வழிபாடு செய்யும் நேரம் எமகண்டம் என்றும்  அழைக்கப்படுகிறது.
 
பொதுவாக மற்ற கிரகங்களின் ஆற்றல் அந்த நேரத்தில் குறைந்திருக்கும் என்பதால்தான் ராகு காலத்தில் சுப காரியங்களைத் தவிர்க்க வேண்டும் என கருதப்படுகின்றது. அதே சமயம் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபட்டால் சிறப்பு பலன்களை தருகிறது எனப்படுகிறது.
 
வாரத்தில் அனைத்து நாட்களுமே ராகு காலத்தில் தேவி வழிபாடு செய்வது சிறந்த பலனைத் தரும். இருப்பினும் குறிப்பிட்ட பிரச்சினைகள் தீர பிரத்தியேக தினங்களில் வணங்குவது சிறப்பு என்பது ஐதீகம்.
 
செவ்வாய் ராகு ஆகிய கிரகங்களால் தோஷம் இருந்தாலோ அல்லது வாழ்வில் தடைகளும் துன்பங்களும் தொடர்ந்தாலோ ராகு கால வழிபாட்டினை மேற்கொண்டு துர்க்கையை வழிபடுவது நற்பலன்களை தருகின்றன.
 
ராகு கால நேரத்தில் நல்ல காரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்பது பலரது பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் இது விசேஷ பூஜைகள் செய்து, வேண்டிய வரத்தினை பெறுவதற்கான உகந்த நேரம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திதி, திவசம் பற்றி சாஸ்திரம் கூறிவது என்ன?