சங்பரிவாரின் பேச்சை கேட்டு நடக்கும் சீமான்? கட்சியிலிருந்து விலகிய ஜெகதீச பாண்டியன் பரபரப்பு அறிக்கை!

Prasanth Karthick
வெள்ளி, 31 ஜனவரி 2025 (14:30 IST)

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில் நா.த.க மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியனும் விலகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரான சீமான் சமீபமாக பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்சி சார்ந்த செயல்பாடுகளிலும் சீமான் தங்களது கருத்தை மதிப்பதில்லை எனக் கூறி நாம் தமிழர் கட்சியினர் பலர் பிற கட்சிகளுக்கு கூண்டோடு மாறி வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ஜெகதீச பாண்டியனும் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

 

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட ஜெகதீச பாண்டியன், சீமான் சங் பரிவார் கும்பலுடன் சேர்ந்து முழு சங்கி போல செயல்படுவதாக விமர்சித்துள்ளார். அதில் “அடிக்கடி நீங்கள் குருமூர்த்தியையும், கோபால் ஜீயையும் சந்தித்து அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் நமது தேசியத் தலைவரையும், பெரியாரையும் எதிர் எதிராக நிறுத்துவது தமிழ்நாட்டில் தமிழர் அரசியல் வளர்ச்சி பெறாமல் இருக்க சங்பரிவார் கும்பலின் சதித்திட்டம் என தெளிவாகத் தெரிகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

தொடர்ந்து சீமானின் சொந்த கட்சியினரே அவருக்கு எதிராக மாறி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments