Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெஞ்சுக்கு நீதிக்கு பிரியாணி.. சிறப்பான மக்கள் பணி! – சீமான் கிண்டல்!

Webdunia
திங்கள், 23 மே 2022 (15:25 IST)
உதயநிதி நடித்து வெளியாகியுள்ள நெஞ்சுக்கு நீதி படத்தை திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ப்ரொமோட் செய்து வருவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் நடித்து அருண்ராஜா காமராஜ் இயக்கி வெளியாகியுள்ள படம் நெஞ்சுக்கு நீதி. இந்தியில் வெளியான ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் ரீமேக்கான இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதேசமயம் நெஞ்சுக்கு நீதி படத்தை திமுக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் சென்று பார்த்து அதில் உள்ள சமூகநீதி கருத்துகளை புகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் கிண்டலாய் பதிவிட்டுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற, மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தம்பி உதயநிதி நடித்த படத்தை முதல் காட்சி பார்த்துவிட்டுப் படம் எடுத்துப் பகிர்ந்து படத்தைப் பாராட்டி பதிவிடுகிறார்கள். டிக்கெட்களை வாங்கி இலவசமாகக் கொடுக்கிறார்கள். படம் பார்ப்பவர்களுக்கு பிரியாணி போடுகிறார்கள். சிறப்பான மக்கள் பணி! வாழ்க திராவிட மாடல்!” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னிடம் அந்த கேள்வியை மட்டும் கேட்காதீர்கள்: செய்தியாளர்களிடம் சசிதரூர் கோரிக்கை..!

மதிமுகவுக்கு முடிவு காலமா? மல்லை சத்யாவுடன் கூண்டோடு வெளியேறும் நிர்வாகிகள்?

தாலிக்கு தங்கம்.. மணமகளுக்கு இலவச பட்டுச்சேலை.. ஈபிஎஸ் வாக்குறுதி..!

ஜீவனாம்சமாக வீடு, ரூ.12 கோடியும் BMW காரும் கேட்ட பெண்.. நீதிமன்றம் கொடுத்த பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments