Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை.... ஊழியர்களை கண்டித்த தி.மு.க எம்.எல்.ஏ

Advertiesment
Liquor sale at extra
, ஞாயிறு, 22 மே 2022 (00:32 IST)
மதுபான கடையில் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிகமாக மதுபானத்திற்கு கூடுதல் ரூபாய் 10 வசூல் செய்த டாஸ்மாக் ஊழியர்கள் நேரில் சென்று கண்டித்த தி.மு.க எம்.எல்.ஏ வி.ஜி. ராஜேந்திரன்- பரபரப்பு வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாக பரவுகிறது......
 
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவிற்கு உட்பட்ட சின்னம்மா பேட்டை கிராமப்பகுதியில் 100 நாள் மகாத்மா காந்தி தேசிய  பணி மற்றும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க தி.மு.க-வைச் சேர்ந்த திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி. ஜி.ராஜேந்திரன் கலந்து கொண்டார்..
 
 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு இருக்கும் பொழுது அந்த பகுதியில் திடீரென வந்த இரண்டு மது பிரியர்கள் சின்னம்மா பேட்டை அரசு மதுபான டாஸ்மார்க் கடையில் நிர்ணயிக்கப்பட்ட எம்.ஆர்.பி விலையைவிட கூடுதலாக ஒரு பாட்டில்களுக்கு மது பாட்டில்கள் ரூபாய் 10 ரூபாய் கேட்கிறார்கள் என்று குற்றச்சாட்டை எம்.எல்.ஏ விடும் வைத்தார்கள்..
 
 உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைக்கு குற்றச்சாட்டு கூறிய மது பிரிய ரை அழைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட டாஸ்மார்க் கடையில் பணியில் இருந்த ஊழியர்கள் இடம் ஏன் அதிகமாக டாஸ்மார்க் கடையில் மது பாட்டில்களுக்கு பத்து ரூபாய் வசூல் செய்கிறார்கள் என்று வினா எழுப்பி ஒரு நாளைக்கு 500 பாட்டில் 1000 பாட்டில் மது பாட்டில்கள் விற்பனை செய்கிறீர்கள் அப்படி என்றால் ஒரு நாள் உங்களுக்கு வருமானம் 10 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வருகிறது. ஏழைகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் அரசு மதுபான டாஸ்மாக் கடைக்கு வந்தால் நீங்கள் இப்படி அநியாயம் செய்யலாமா? என்று டாஸ்மாக் ஊழியர்களை கடுமையாக கண்டித்துப் பேசி திருவள்ளூர் மாவட்ட டாஸ்மாக் நிர்வாக மேலாளரிடம் டாஸ்மார்க் கடை முன்பு நின்று சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் இது சம்பந்தமாக புகார் தெரிவித்து. இந்த டாஸ்மாக் ஊழியர்கள் செய்யும் செயல் சரி இல்லை என்று கண்டனத்தை தெரிவித்தார்.
 
 மேலும் மது குடிப்பவர்களுக்கு ஆதரவாக பேசி அரசு மதுபான கடைக்கு நேரில் சென்று கூடுதல் பத்து ரூபாய் வசூல் செய்யும் செயலுக்கு கண்டனம் தெரிவித்து மேலும் புகார் கூறிய மதுப் பிரியர்களுக்கு அவர்கள் கூடுதலாக மதுபான பாட்டில்களுக்கு கொடுத்த ரூபாய் பத்தை டாஸ்மார்க் ஊழியர்களிடம் இருந்து பெற்று திருப்பி வாங்கி கொடுத்த  சட்டமன்ற உறுப்பினரின் இந்த செயல் பரபரப்பாக இந்த வீடியோ சமூக வலைதளத்தில் சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர் பரப்பி வருகிறார்கள்.
 இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் நேரில் வந்து இதுபோல் டாஸ்மார்க் கடையில் கூடுதல் கட்டணம் கூடுதல் ரூபாய் வசூல் செய்வதை கண்டிக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள மது பிரியர்கள் அழைப்பு விடுத்து வருகிறார்கள்.. சட்டமன்ற உறுப்பினருக்கு என்பது கூடுதல் தகவல்....
 
 மொத்தத்தில் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் டாஸ்மாக் கடைக்குச் சென்று கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது......

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறை அதிகாரிகளுக்கான அடிப்படை 9 மாதகால பயிற்சி நிறைவு