Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழிக்கிறது ஈஸி; காப்பாத்துறதுதான் கஷ்டம்! – கொரோனா குறித்து சீமான்!

Webdunia
புதன், 8 ஏப்ரல் 2020 (14:22 IST)
கொரோனா பாதிப்பால் உலகமே முடங்கியிருக்கும் சூழலில் கொரோனா மக்களுக்கு பெரும் பாடத்தை நடத்தியுள்ளதாக சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது. பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் முழுவதும் தங்கள் மக்களை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இத்தாலி, ஸ்பெயின் போன்ற வளர்ந்த நாடுகள் பெரும் பொருட் செலவு செய்தும் நாட்டில் இறப்பு எண்ணிக்கையை குறைக்க முடியாமல் திணறி வருகின்றன. இதுகுறித்து பேசியுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “உலகை அழித்து முடிக்க வேண்டுமென்றால் ஐந்து நாட்களிலேயே செய்து காட்டிருப்பார்கள். காப்பாற்ற வேண்டும் என்றவுடன் திணறிக் கொண்டிருக்கிறார்கள். அறிவியல் எப்போதும் அறவியலாகத்தான் இருக்கவேண்டுமேயொழிய அழிவியலாக இருக்கக் கூடாது. கொரோனோ நமக்கு நடத்தியிருக்கும் பெரும்பாடம்.அனைவரும் கற்போம்!” என ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாக்கை அறுத்து சிவனுக்கு காணிக்கை செலுத்திய 11ஆம் வகுப்பு மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

5 கிலோ தக்காளி 100 ரூபாய்.. விலை சரிந்ததால் விவசாயிகள் வருத்தம்.!

7 வழக்குகளிலும் ஜாமீன்: விடுதலை ஆனார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன்..!

புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

விஜயகாந்த் ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கிரகப்பிரவேசத்திற்கு தயார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments