Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை தடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை தடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்
, புதன், 8 ஏப்ரல் 2020 (14:17 IST)
சீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று இந்தியா முதற்கொண்டு 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மிகவேகமாகப் பரவி வருகிறது.  இதுவரை இந்த நோயால் சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.  இந்தியாவில் ஊரங்கு உத்தரவு வரும் 14 ஆம் தேதிவரை கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்திலும் இந்த ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. காலை முதல் மதியம் 1 மணிவரை மட்டுமே மளிகைக் கடைகள் திறந்து வைத்திருப்பதால் மக்களுக்கு தேவையான பொருட்கள் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

அதேசமயம் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளதாவது :
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை தடுக்க வேண்டும் நோய்த் தொற்றிலிருந்து காத்துக் கொள்வது போல உணவுத் தட்டுப்பாடின்றி காக்க வேண்டியதும் அவசியம் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா நிவாரண நிதியாக 1 பில்லியன் டாலர் ... Twitter CEO டூவீட்