Publish Date: Thu, 16 Dec 2021 (08:45 IST)
Updated Date: Thu, 16 Dec 2021 (08:49 IST)
சென்னையில் நடந்த நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் பேசிய சீமான் செருப்பை எடுத்து காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூரில் தமிழ் தேசிய தொண்டர் ஒருவருக்கான அஞ்சலி கூட்டத்தை நாம் தமிழர் கட்சி ஏற்பாடு செய்திருந்தது. அதில் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் கலந்து கொண்டு பேசினார்.
அதில் அவர் “சாட்டை துரைமுருகனுக்கு எதிராக குரல் கொடுக்கும் திமுக வழக்கறிஞர்கள் மாரிதாஸை கண்டுகொள்ளாதது ஏன்? மாரிதாஸ் மீது போடப்பட்ட வழக்கில் அரசு வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. கைதாகி 4 நாட்களில் அவர் விடுதலையாகிறார். இது தமிழக அரசுக்கு அவமானம். திமுகதான் உண்மையான சங்கி” என பேசியுள்ளார்.
அவ்வாறாக பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென தான் அணிந்திருந்த செருப்பை கழற்றி தொண்டர்களிடையே காட்டி அவர் பேசியுள்ளார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு எழுந்துள்ளது.