விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமில்லை! – சீமான் கருத்து!

Webdunia
ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (14:39 IST)
நடிகர் விவேக் மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் நிலவும் நிலையில் அவரது மரணத்திற்கு தடுப்பூசி காரணமில்லை என சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக் நேற்று உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில் முன்னதாக அவர் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதே அதற்கு காரணம் என மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் குற்றம் சாட்டி வருவதாலும், இதுகுறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களாலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ”நான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. ஆனால் நான் விசாரித்தவரை நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு பிரச்சினை இருந்துள்ளது. ஒருவேளை ஊசி போட்டதால் கூடுதலாக வந்திருக்கலாமே தவிர தடுப்பூசியே காரணமில்லை” என கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான பணிப்பெண்கள் கொடுத்த உணவை சாப்பிட்ட மருத்துவர் பலி.. மூச்சுத்திணறல் என தகவல்..!

160 கிமீ வேகத்தில் செல்லலாம்! தாம்பரம் - செங்கல்பட்டு 4வது இருப்புப்பாதை! - ரயில்வே தீவிரம்!

குழந்தைகள் சாகக் காரணமான கோல்ட்ரிப் ஆலை மூடல்! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வோம்: தமிழக அரசுக்கு ஜாக்டோ-ஜியோ எச்சரிக்கை..!

முதுகுவலி சரியாக தவளைகளை விழுங்கிய மூதாட்டி! ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

அடுத்த கட்டுரையில்
Show comments