Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி மீதான முரண்பாடு நீங்கியது - சீமான்!!

Webdunia
ஞாயிறு, 4 அக்டோபர் 2020 (13:39 IST)
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்திய பேட்டியில் ரஜினி குறித்தும் தேர்தல் குறித்தும் பேசியுள்ளார்.  
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் இப்போதே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டன. குறிப்பாக திமுக தனது கூட்டணி பலத்தை அப்படியே மைண்டெய்ன் செய்ய நினைக்கிறது.  
 
அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகி தனி அணி அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே கூறப்படுகிறது.  
 
இந்நிலையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், நாம் தமிழர் வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும். கொரோனா காரணமாக தேர்தல் பணியில் தாமதம் ஏற்பட்டுவிட்டது என முன்னரே கூறி இருந்த நிலையில் தற்போது மீண்டும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். 
 
ஆம் சமீபத்திய பேட்டியில், 2021 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார். அதோடு ரஜினி மீது இருந்த முரண்பாடும் நீங்கியதாக தெரிவித்துள்ளார். 
 
அதாவது ரஜினி கட்சி துவங்கி தேர்தலில் போட்டியிட்டால் வேறு ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பேன் என ரஜினி கூறியதால அவர் மீதான முரண்பாடு நீங்கியுள்ளது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

கணவரால் குழந்தையில்லை.. ஆத்திரத்தில் பிறப்புறுப்பை வெட்டிய 2வது மனைவி..!

ஆட்சிக்கு வந்தா ஒரு பேச்சு.. வரலைன்னா ஒரு பேச்சு! - மு.க.ஸ்டாலின் மீது தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments