கன்னியாக்குமரியில் கடந்த சில நாட்களாக கடல் உள்வாங்கி வருவதால் மீனவர்கள் பீதி அடைந்துள்ளனர்.
கன்னியாக்குமரியில் இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபி கடல் ஆகிய மூன்று கடல்களும் சங்கமிக்கின்றன. நேற்று முன் தினம் மாலை நேரத்தில் திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து நேற்று மாலையும் கடல் சுமார் 50 அடிதூரம் உள்வாங்கியது. இதனால் கடலில் உள்ள பாறைகள் தென்பட தொடங்கின.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து கடல் உள்வாங்குவது மீனவர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுபோன்று அவ்வபோது நிகழ்வது சகஜம்தான் என்றும் அமாவாசை, பௌர்ணமி சமயங்களில் இதுபோன்று கடல் உள்வாங்கும் நிகழ்வுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.