Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்கள் புரட்சிக்கு முன்னால் எத்தகைய வலிமைப்பெற்ற அரசும் வீழ்ந்தே தீரும்:சீமான்

Advertiesment
மக்கள் புரட்சிக்கு முன்னால் எத்தகைய வலிமைப்பெற்ற அரசும் வீழ்ந்தே தீரும்:சீமான்
, வெள்ளி, 19 நவம்பர் 2021 (13:25 IST)
மக்கள் புரட்சிக்கு முன்னால் எத்தகைய வலிமைப்பெற்ற அரசும் வீழ்ந்தே தீரும் என்பதற்கு மற்றுமொரு வரலாற்றுச்சான்றாக வேளாண் சட்டங்களுக்கெதிரான விவசாயிகளின் போராட்டம் அமைந்துள்ளது. மக்களின் திரட்சியே மாற்றத்திற்கான புரட்சி என்பதை வரலாறு மீண்டும் மெய்ப்பித்துள்ளது என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார்.
 
மோடி தலைமையிலான பாஜக அரசு தலைமை ஏற்றது முதல் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை முறைகேடாக பயன்படுத்தி நாட்டின் வளங்களை பன்னாட்டு முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் வகையில் பல்வேறு திருத்தச் சட்டங்களை கொண்டு வந்துள்ளது
 
அதில் உச்சமாக நாட்டின் முதுகெலும்பான வேளாண்மையை சீரழித்து விவசாயிகளை பன்னாட்டு கூட்டுறவு நிறுவனங்களின் கூலிகளாக மாற்றும் வகையில் மூன்று வேளாண்மை சட்டங்கள் இருந்தது
 
விவசாயிகளின் கடும் எதிர்ப்பை மீறி அமல்படுத்தப்பட்ட இந்த வேளாண்மை சட்டம்,  விவசாயிகளின் போராட்டம் காரணமாக திரும்பப் பெற்றுள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி ஆகும். வேளாண்குடி மக்களுக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஸீம் ரஃபீக்: இனவெறி சர்ச்சையால் அதிரும் இங்கிலாந்து கிரிக்கெட் - நடப்பது என்ன?