Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

Siva
செவ்வாய், 8 ஏப்ரல் 2025 (18:09 IST)
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்யா பிரதமர் புதின் ஆகிய இருவரும் எனக்கு ரொம்ப நெருக்கம் என இன்று செய்தியாளர் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
"நீங்கள் பாஜகவுடன் நெருக்கமாக இருப்பது போல் தெரிகிறது" என செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டபோது, "நியாயமாக பார்த்தால் நான் ட்ரம்ப் கூட நெருக்கமாக இருக்கிறேன். அவருடன்தான் தினமும் பேசுகிறேன். நீங்கள் அதை யாரும் சொல்லவில்லை. அது மட்டும் இல்ல; ரஷ்யா அதிபர் புதின் கூட எனக்கு ரொம்ப நெருக்கம் தான்" என்று கூறினார். அவரது இந்த பதில் கலகலப்பை ஏற்படுத்தியது.
 
மேலும், "நானும் அண்ணாமலையும் அண்ணன்-தம்பி போல் பழகி வருகிறோம். திமுகவை இருவருமே எதிர்க்கிறோம் என்று தெரிவித்தார்.
 
"வரும் தேர்தலிலும் தனித்து போட்டியிடுவோர்களா?" என்று கேட்டபோது, "இன்னும் ஒரு ஆறு மாதம் இருக்கிறது தேர்தலுக்கு. கொஞ்சம் பொறுத்திருங்கள்; விரைவில் பதில் அளிக்கிறேன்" என்று தெரிவித்தார்.
 
மேலும் ஆட்சி மாற வேண்டும் என்பதை இந்த மண்ணின் ஒவ்வொரு குடிமகனும் நினைக்க வேண்டும். கட்சிகள் கூடி கூட்டணி சேர்ந்து மாற்றத்தை உருவாக்கி விடுவார்கள் என்று நினைக்கக் கூடாது என்று சீமான் கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கே.என்.நேரு சகோதரரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்ற அதிகாரிகள்.. கைதாவரா?

பாஜகவில் இணைந்த சிஎஸ்கே நட்சத்திர கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ்!

ஆளுனர் விவகாரம்: ஒட்டு மொத்த மாநிலங்களுக்கு கிடைத்த வெற்றி: கனிமொழி எம்பி

உங்க பட டிக்கெட் விலைய குறைச்சீங்களா விஜய்? கேஸ் விலை பத்தி பேசாதீங்க! : தமிழிசை செளந்திரராஜன்..!

ஜிம்மில் பரிந்துரை செய்த ஊக்கமருந்து.. 3 நாட்கள் சிறுநீர் வெளியேறாமல் உயிரிழந்த வாலிபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments