பிரதமர் மோடி ரஷ்யாவின் தூரதேச நகரங்களை முன்னேற்றும் விதமாக ரூ 7200 கோடி கடனளிக்கப்படும் என அறிவித்துள்ளது குறித்து சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
மோடி செப்டம்பர் 3 ஆம் தேதி கிழக்கு மண்டல பொருளாதார கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரஷ்யா சென்றார். அப்போது ரஷ்யாவின் தூர கிழக்கு பகுதிகளில் உள்ள நகரங்களின் வளர்ச்சிக்காக 7,200 கோடி கடன் அளிக்கப்படும் என உறுதியளித்தார். இது இந்தியா இப்போதிருக்கும் நிலைமையில் தேவையான ஒன்றா என்று சர்ச்சைகள் எழுந்தன.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களிடம் அளித்த பதிலில் ’ டீமானிடசைஷேன் மற்றும் ஜி எஸ்டி போன்ற தவறான நடவடிக்கைகளால் மக்கள் வாங்கும் திறனை இழந்துள்ளனர். மத்திய அரசே ரிசர்வ் வங்கியில் இருந்து 1.76 லட்சம் கோடி ரூபாயை எடுத்துள்ளது. இப்போது ரஷ்யா உங்களிடம் கடன் கேட்டதா?. ரஷ்யாவுக்குக் கடன் கொடுக்கும் அளவுக்கு இந்தியா இப்போது உள்ளதா ?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.