Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உண்மையான ஆண்டு வருமானம் இதுதான்: மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்த சீமான்

Advertiesment
உண்மையான ஆண்டு வருமானம் இதுதான்: மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்த சீமான்
, வெள்ளி, 19 மார்ச் 2021 (13:25 IST)
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தபோது 2019-2020 ஆம் ஆண்டு வருமானம் ரூபாய் 1000 மட்டுமே என குறிப்பிட்டிருந்தார். இது நெட்டிசன்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானது 
 
ஒரு ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் வருமானம் என்றால் ஒரு நாளைக்கு சுமார் மூன்று ரூபாய்தான் சீமான் வருமானம் பார்க்கிறாரா? அதை வைத்துதான் ஆடம்பர கார்களில் சென்று வருகிறாரா என சீமானை விமர்சித்து மீம்ஸ்களை போட்டு தள்ளினர்
 
இந்த நிலையில் தனது ஆண்டு வருமானத்தில் எழுத்துப் பிழையுடன் தவறாக இடம் பெற்றுள்ளதாக கூறி இன்று அவர் மீண்டும் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் அவர் 2019-2020 ஆம் ஆண்டில் வருமானம் 4 லட்சத்து 72 ஆயிரத்து 900 என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
முன்னதாக ஆயிரம் என குறிப்பிடப்பட்டிருந்தது தற்போது இந்த தொகையை அவர் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் சீமானின் மனைவியும் வருமானமும் இன்று தாக்கல் செய்த வேட்புமனுவில் மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மநீம பொருளாளர் ரூ.80 கோடி வருமானத்தை மறைத்தது கண்டுபிடிப்பு: இதுதான் மாற்றமா?