Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்கள பாத்த முட்டா பய மாறி இருக்கா? காண்டான சீமான்!

Webdunia
சனி, 4 ஜனவரி 2020 (15:03 IST)
பிரசாந்த் கிஷோர் போன்று தேர்தல் ஆலோசனைக்காக நாம் தமிழர் கட்சி யாரையாவது நியமிக்குமா என்ற கேள்விக்கு கடுப்பாகியுள்ளார் சீமான். 
 
தமிழக ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. ஆளுங்கட்சியான அதிமுக கணிசமான வித்தியாசத்தில் திமுகவை விட குறைவான இடங்களை பெற்றுள்ளது. ஒன்றிய தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளது.
 
இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் போன்று தேர்தல் ஆலோசனைக்காக நாம் தமிழர் கட்சி யாரையாவது நியமிக்குமா என கேள்வி எழுப்பினர். இதற்கு சீமான் சற்று காட்டமாகவே பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, நாங்கள் உலகத்தையே ஆள்வதற்கான அறிவு பெற்றிருக்கிறோம். இன்னொருவரின் மூளைக்கு எங்களால் வேலை செய்ய முடியாது. நாங்கள் அறிவின்மை கொண்டவர்கள் அல்ல. 
 
மக்களுக்கு உள்ளத் தூய்மையுடன் சேவை செய்ய வந்திருக்கிறோம். அப்படிச் செய்திருந்தால் பிரசாந்த் கிஷோர் திமுகவுக்குத் தேவையில்லை. கட்சித் தலைமை மீது நம்பிக்கை இல்லாததால் இன்னொருவரைக் கூலியாக வேலைக்கு வைத்திருக்கின்றனர் என பதிலளித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போனில் தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவர்.. வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணி தான் ஊழல் கூட்டணி: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னையில் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை..! ஒரு லட்சத்தை நெருங்குமா?

ஆளுநர் நிறுத்திவைத்த 10 மசோதாக்களும் சட்டமானது: அரசிதழில் வெளியீடு!

ராணாவை நாடு கடத்தும் முயற்சியை ஆரம்பித்தது நாங்கள் தான்: ப. சிதம்பரம்

அடுத்த கட்டுரையில்
Show comments