Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாலியல் வன்கொடுமைகளுக்கு கடுமையான சட்டம் வேண்டும்! – சீமான் கோரிக்கை!

Advertiesment
பாலியல் வன்கொடுமைகளுக்கு கடுமையான சட்டம் வேண்டும்! – சீமான் கோரிக்கை!
, ஞாயிறு, 21 நவம்பர் 2021 (09:34 IST)
கரூர் பள்ளி மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் நடவடிக்கைகள் எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் கோவையில் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி மீளாத நிலையில் கரூரிலும் மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மாணவி தற்கொலை விவவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “கரூரில் 12ஆம் வகுப்புப் படிக்கும் தங்கை பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன். தங்கையின் மரணத்திற்குக் காரணமானவர்களை சட்டத்திற்கு முன்நிறுத்தி, உச்சபட்சத் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமணத்திற்கு மறுத்த இளைஞர்; ஆசிட் வீசிய பெண்! – கேரளாவில் அதிர்ச்சி!