Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு தமிழன் ‘சூப்பர் ஸ்டாராக’ இருக்கக் கூடாதா? – சீமான் கேள்வி

Advertiesment
ஒரு தமிழன் ‘சூப்பர் ஸ்டாராக’ இருக்கக் கூடாதா? – சீமான் கேள்வி
, செவ்வாய், 17 ஜனவரி 2023 (10:48 IST)
நடிகர் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்ட விவகாரத்தில் நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ள கருத்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக ‘சூப்பர் ஸ்டார்’ என்ற அடையாளத்துடன் இருந்து வருபவர் ரஜினிகாந்த். சமீப காலமாக சிலர் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டு பேசியது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சினிமா பத்திரிக்கையாளர் ஒருவருடன் ரஜினி ரசிகர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருந்தனர். அப்போது சூப்பர் ஸ்டார் என்பது ஒருவருக்கான பட்டம் அல்ல என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருந்தார்.

தற்போது வரை சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் குறித்த சர்ச்சை நிலவி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்கள் பேட்டி ஒன்றில் விஜய் கட்சி தொடங்கினால் கூட்டணி அமைப்பீர்களா என கேட்கப்பட்டது. இதுகுறித்து பேசிய நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் “விஜய் கட்சி தொடங்கினாலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடதான் தயாராக உள்ளது. விஜய் முதலில் கட்சி தொடங்கி அதற்கான கொள்கையை வெளியிட வேண்டும். ஒத்த கருத்து இருந்தால் இணைந்து பயணிக்கலாம்.


நான் விஜய்யின் ரசிகர்களை கணக்கு வைத்து அவருக்கு ஆதரவாக பேசவில்லை. இதற்கு முன்பு தம்பி சூர்யா, சிம்பு, கார்த்தி உள்ளிட்டவர்களுக்கும் ஆதரவாக பேசியுள்ளேன்” என கூறியுள்ளார்.

மேலும் சூப்பர் ஸ்டார் விவகாரம் குறித்து பேசிய சீமான் “சூப்பர் ஸ்டார் என்பது பட்டம்தானே தவிர பட்டயம் கிடையாது. விஜய்யின் படத்தைதான் பெண்கள், குழந்தைகள் அதிகம் பார்க்கிறார்கள். எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். ரஜினியை கேட்டாலும் அவரும் இதைதான் சொல்வார். ஒரு தமிழனை ஏன் சூப்பர் ஸ்டார் என உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Edit By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாயிடமிருந்து தப்பிக்க மாடியிலிருந்து குதித்த ஸ்விகி ஊழியர் பலி! – தெலுங்கானாவில் சோகம்!