பிரதமர் மோடியின் உரை தமிழக கோவில்களில் ஒளிபரப்பப்பட்ட்து குறித்து நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரகாண்டின் கேதர்நாத்தில் நடந்த மத வழிபாட்டு நிகழ்வுகளில் பிரதமர் மோடி சமீபத்தில் பங்கேற்று பேசிய நிலையில், அவர் பேசியது நேரலையாக தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்கள் சிலவற்றில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “எந்தவித அனுமதியின்றியும் பாஜகவினர் பிரதமரின் பேச்சை கோவில்களில் ஒளிபரப்ப அனுமதித்தது யார்? கோவில்களும், வழிபாட்டு தளங்களும் ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் பிரச்சாரக்கூடங்களாக மாறுகிறது என்றால், அறநிலையத்துறை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? அல்லது ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் உள்ளதா? அத்துமீறி நிகழ்ச்சியை ஒளிபரப்பியவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.